Zமனிஷாவுக்குக் கிடைக்குமா விருது?

public

இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அப்படம் தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றதுடன் இவருக்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதையும் பெற்றுத் தந்தது.

பின்னர் சுசீந்திரனின் ‘ஆதலால் காதல் செய்வீர்’, கரு.பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’, விதார்த்துடன் ‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’ போன்ற படங்களில் நடித்தார். ஜி.வி.பிரகாஷுடன் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பி-யுடன் முத்தக்காட்சியிலும் கவர்ச்சியாகவும் நடித்திருந்தார். அதன்பிறகு பெரிதாக படங்கள் கமிட்டாகாததால், சமீபத்தில் திருமணம் முடித்து பெங்களூரில் செட்டிலாகியுள்ளார். தற்போது இவர் நடித்த ‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

இப்படத்தில் நடித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனிஷா, “திருமணத்துக்கு முன்பு நான் நடித்த திரைப்படம்தான் ‘ஒரு குப்பைக் கதை’. ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் நடித்தேன். படத்தின் பெரும்பாலான பகுதியை சென்னையில் நிஜமான குடிசைப் பகுதிகளில்தான் எடுத்தார்கள். படப்பிடிப்பு நடக்கும்போது நிறைய மழை பெய்தது. அதனால் இன்னும் அதிகமாகவே கஷ்டப்பட்டோம். என்னைவிட படத்தின் ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர் இந்தப் படத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டார். ‘வழக்கு எண் 18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்துக்குப் பிறகு, இந்தப் படம் எனக்கு நல்ல பெயரை சினிமாவில் வாங்கிக் கொடுக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் ஹோம்லி லுக் கேரக்டரில் நடித்திருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் “ஒரு குப்பைக் கதை படத்துக்காக விருது கிடைக்குமா?” எனக் கேட்கப்பட்டபோது, “படம் பண்ணும்போது அப்படி எதுவும் தோன்றவில்லை. ஆனால், படத்தின் எடிட்டிங் முடிந்து பார்த்துவிட்டு சில பேர் இந்தப் படத்துக்காக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால், விருதுக்காக இந்தப் படம் பண்ணவில்லை. திருமணத்துக்குப் பிறகு, நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், நல்ல கேரக்டருக்காக காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் மனிஷா.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *