அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியாவிலும் முன்னணி மின்னணு சில்லறை வர்த்தக நிறுவனமாக தொழில் செய்து வருகிறது. கழிவறைகளில் பயன்படுத்தப்படும் கவர்கள், காலணிகள், வாசலில் பயன்படுத்தப்படும் மேட் உள்ளிட்ட பொருட்களில் பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாக படங்கள் பொறிக்கப்பட்டு அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அமேசானின் பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி #BoycottAmazon என்ற ஹேஷ்டேக்கை நேற்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து அமேசான் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ட்விட்டர் வாசிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு முன் 2017ஆம் ஆண்டில் கனடா நாட்டிற்கான அமேசான் இணையதளத்தில் இந்திய கொடி பொறிக்கப்பட்ட மேட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அமேசான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, அந்த மேட்கள் அமேசான் தளத்திலிருந்து நீக்கப்படவில்லை என்றால் அமேசான் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எச்சரித்தார்.
இந்நிலையில், மீண்டும் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை அமேசான் விற்பனை செய்வது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களுக்கு எதிரான கொள்கைகளுடன் தொழில் செய்யும் அமேசான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டர் வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”