பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் நமோ டிவி என்ற தொலைக்காட்சி பாஜக சார்பில் தொடங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சியை பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நடத்தி வந்தது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நரேந்திர மோடி அரசின் சாதனைகள் பற்றி விளம்பரம் செய்வதற்காக இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் இந்தத் தொலைக்காட்சி மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் *பிடிஐ* செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவின் பிரச்சாரத்திற்கான கருவியாகவே நமோ டிவி உருவாக்கப்பட்டது. தேர்தல் முடிந்தபிறகு அந்த தொலைக்காட்சிக்கான தேவை இனிமேல் இல்லை. அனைத்துப் பிரச்சாரப் பணிகளும் ஓய்வடையும் நாளான மே 17ஆம் தேதியன்று நமோ டிவி நிறுத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்தின்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது நமோ டிவி. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் அரசியல் கட்சிகள் இதுபோல தொலைக்காட்சிகளை தொடங்கலாமா எனவும் இத்தொலைக்காட்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டதா எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வந்தன.
ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கு முன் அமலுக்கு வரும் 48 மணி நேர பிரச்சார ஓய்வு விதிமுறைகளை நமோ டிவி கடைப்பிடிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியிருந்தது. டாடா ஸ்கை, வீடியோகான், டிஷ் டிவி உள்ளிட்ட பல டிடிஎச் சேவை நிறுவனங்களும் தங்களது சந்தாதாரர்களுக்கு இலவசமாக நமோ டிவி சேவையை வழங்கி வந்தன. பிரதமர் மோடியின் பிரச்சார உரைகள், தேர்தல் தொடர்பான கருத்துகள் அனைத்தும் நமோ டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
**
[சென்னை: மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/9)
**
.
.
�,”