பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
90களில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வந்த பிரசாந்த் முன்னணி நாயகிகள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். அழகிப் பட்டம் வெல்லும் மாடல்களின் அடுத்த குறி திரைத்துறையை நோக்கித்தான் உள்ளது. அவ்வாறு திரைத்துறைக்குள் அறிமுகமாகும் மாடல்கள் பலர் பிரசாந்துடன் இணைந்து நடித்துள்ளனர்.
உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயுடன் ஜீன்ஸ் படத்தில் இணைந்து நடித்தார். மிஸ் இந்தியா பட்டம் வென்ற இஷா கோபிகருடன் காதல் கவிதை படத்தில் நடித்தார். பொன்னர் சங்கர் படத்தில் மிஸ் இந்தியா பட்டத்துக்கான போட்டியில் கலந்துகொண்ட திவ்யா பரமேஸ்வரனும், உலக அழகி உட்பட பல பட்டங்களை வென்ற பூஜா சோப்ராவும் பிரசாந்துடன் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 2018ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அனு கீர்த்திவாஸ் பிரசாந்துடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
ஏ.வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது. ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகும் இந்தப் படத்தில் பூமிகா பிரசாந்தின் சகோதரியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நரேன், நாசர், ஜெயசுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரசாந்த் ஏற்கெனவே ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சாக்லேட் படத்தில் நடித்துள்ளார்.�,