பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்
விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி தனது அடுத்தப் படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். முந்தைய படத்திலிருந்து மாறுபட்ட கதையாக உருவாகிவரும் இந்தப்படத்தில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். ஹீரோ இமேஜ் இல்லாமல் இயக்குநர்களின் ஹீரோவாக இருந்தால் இந்தப்படத்தின் கேரக்டருக்கு நன்றாக இருக்கும் எனப் படக்குழு எண்ணியதையடுத்து ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் நடிக்க தேர்வானார்.
பைக் ரேஸர், பாக்ஸிங் வீரர் என இப்படத்தில், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள ஹரிஷ் கல்யாணுக்கு கதாநாயகி தேர்வு நடைபெற்றுவந்தது. இந்நிலையியில் காளி படத்தில் நடித்த ஷில்பா இதில் நடிக்க தற்போது தேர்வாகியுள்ளார். அந்தப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகும் முன்பே இந்தப்படத்திற்கான ஆடிஷனில்தான் முதலில் பங்கேற்றிருந்திருக்கிறார் ஷில்பா.
ஆனால் கிருத்திகா உதயநிதி சற்று முந்திக்கொண்டதால் காளி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டார் ஷில்பா.ஹரிஷ் கல்யாண், ஷில்பா என பலர் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் மா.கா.பா ஆனந்த், பால சரவணன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.
�,”