zபாதிரியார்களின் முன் ஜாமீன் மனு நிராகரிப்பு!

Published On:

| By Balaji

கேரளாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார்கள் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 11 ) நிராகரித்துள்ளது.

பாதிரியார்கள் ஜாப் மேத்யூ, ஆபிரகாம் வர்கீஸ் மற்றும் ஜெயீஸ் கே ஜார்ஜ் ஆகிய மூவர் மீதும் பாலியல் பலாத்காரம் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆலப்புழை மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த மனுவானது உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா விஜயராகவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில்அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகார் மனுவையும், அதனுடன் வேறு ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் ஒப்படைக்க வேண்டும். பாதிரியார்கள் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில், அந்தப் பெண் கூறும் பாலியல் குற்றச்சாட்டை அவர்கள் மறுத்துள்ளனர். அரசியல் நிர்பந்தம் காரணமாகவே அவர் வழக்கு தொடர்ந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே இருதரப்பு ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும் அவர்“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முன்கூட்டியே ஜாமீன் வழங்கப்பட்டால் அது விசாரணையைப் பாதிக்கும்” என்றார்.

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்கச் சென்ற இளம்பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அப்பெண்ணின் கணவர், கத்தோலிக்க சபை பிஷப்புக்கு தெரிவித்தார். இதையடுத்து அந்த 5 பாதிரியாரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்தசம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (ஜூலை 10 ) பாதிரியார் பினு ஜார்ஜ் மீது பாலியல் புகார் அளித்தார். வழக்கைப் பதிவு செய்த காவல்துறை பாதிரியார் பினு ஜார்ஜை தேடி வருகின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share