zபாக். தீவிரவாதி தப்பிய வழக்கில் ஆறு பேர் கைது!

public

)ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மருத்துவமனையில் இரண்டு காவலரைக் கொன்று பாகிஸ்தான் தீவிரவாதியைத் தப்பவைத்த வழக்கில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி அபு அன்சுல்லாவை ஸ்ரீநகரிலுள்ள மகாராஜா ஹரிசிங் மருத்துவமனைக்கு, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகக் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவந்தனர்.

அப்போது, தீவிரவாதிகள் சிலர் அம்மருத்துவமனைக்குள் புகுந்து காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலைக் காவல் துறையினர் சமாளிப்பதற்குள், சிகிச்சை பெற்றுவந்த பாகிஸ்தான் கைதியைத் தீவிரவாதிகள் மீட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் லஷ்கர் இ தாய்பா அமைப்பு ஈடுபட்டுள்ளதும், தப்பியோடிய தீவிரவாதி அந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தத் தாக்குதலில் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதி அபுவைத் தப்பிக்க வைக்க நடந்த சம்பவத்தில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியது, இந்த ஆறு பேர் என்றும் காஷ்மீர் காவல் துறையினர் கூறியுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *