பாகிஸ்தானுக்கு வழங்கிவரும் நிதியுதவியை ரத்து செய்து தீவிரவாதத்துக்கு எதிரான அதிரடியை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது. இந்நிலையில் தீவிரவாதத்துக்குப் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான்மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.23 லட்சம் கோடி நிதி உதவியை ரத்து செய்வதாக அமெரிக்க அறிவித்துள்ளது. தீவிரவாதம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 350 பில்லியன் டாலர் நிதி அளிப்பதற்கும் நிபந்தனைகள் விதிக்கத் தயாராகி வருகிறது ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம்
இதையடுத்து, இப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி அமெரிக்கா தனது அடுத்தடுத்த முடிவுகளை அறிவிக்கவுள்ளது.�,