Zநான் திருடனா? விஜய் மல்லையா பதில்!

Published On:

| By Balaji

விஜய் மல்லையாவை திருடன் போல் சித்தரித்து வெளியான மீம்களையும், கேலிகளையும் தொடர்ந்து அவர் பதிலளித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பியோடி தற்போது வரை அங்கு வசித்து வருகிறார் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் இந்திய அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரான கிரிஸ் கெயிலுடன் விஜய் மல்லையா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கெயில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிரிஸ் கெயில் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடுபவர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மல்லையாவுடனான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட கிரிஸ் கெயில், “பிக் பாஸை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் பதிவான உடன் நெட்டிசன்களின் கவனம் ஈர்க்கப்பட்டு கேலிகளும், மீம்களும் குவியத் தொடங்கின.

அதற்கு பதிலளித்த விஜய் மல்லையா, “எனது நண்பர் கிரிஸ் கெயிலுடன் எனது படத்தை பார்த்துவிட்டு கருத்துகளை தெரிவிப்பவர்களின் கவனத்திற்கு. கொஞ்சம் நிறுத்திவிட்டு நான் திருடனா இல்லையா என்பது பற்றிய உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். 100 விழுக்காடு முழுத் தொகையையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். அதை ஏன் உங்களது வங்கிகள் ஏற்க மறுக்கின்றன என்று அவர்களிடம் கேளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share