நமக்குள் தேடுவோம் 13 – ஆசிஃபா
ஒருவர் மீது பழிசொல்வதைப் பற்றிப் பேசினோம். அதைப் படித்த நண்பர் ஒருவர், “நீ சொன்னது மிகவும் சரி. எதுக்கு அடுத்தவர்களைக் குற்றம் சொல்லிக்கொண்டு? நாம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும்” என்றார்.
ஆது ஒரு எக்ஸ்ட்ரீம் என்றால் இது மற்றொரு எக்ஸ்ட்ரீம். எந்த ஒரு செயலுக்குமே காரணமாக ஒருவர் இருப்பார், அதனால் பாதிப்படைபவராக (நல்ல விதமான பாதிப்போ, கெட்ட விதமான பாதிப்போ) இன்னொருவர் இருப்பார். இதில் யார் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அங்கேயே இருப்பது நல்லது. ஏதேனும் தவறாக நடந்துவிட்டால், “நீ செஞ்சது தப்பில்ல. நான்தான் அப்படி இருந்திருக்கக் கூடாது” என்று சொல்வது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் வெடிபோல. காரணம், ஒருமுறை இப்படிச் செய்துவிட்டால், மறுமுறையும் தவறு நிகழும்போது, அந்தப் பழியை நீங்களே ஏற்க வேண்டும் என்று அவர் மனம் நினைக்கத் தொடங்கும்.
இங்கு மட்டுமல்லாமல், எங்கு என்ன தவறு செய்தாலும், அதை ஒப்புக்கொள்ளும் மனம் அவருக்குக் கிடைக்காமலே போய்விடக்கூடும். எனவே, தவறை யார் செய்தாலும் அதைச் சுட்டிக்காட்டுவது, தேவையென்றால் கோபம் கொள்வதில்கூட தவறு இல்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், சில உறவுகளில், ஆரம்பத்தில் இந்த பழியை ஏற்றுக்கொள்வது ஒன்றுமில்லாத விஷயமாகவும், உறவைப் பாதுகாக்கும் வழியாகவும் தோன்றும். ஆனால், ஒரு கட்டத்தில் அது பெரும் சுமையாகிவிடுகிறது: நமக்கும் சரி, நம் உறவுக்கும் சரி.
சின்னச் சண்டைகள் முதல் பெரிய பிரச்சினைகள்வரை அவரவர் செய்த தவறை அவரவர் ஒப்புக்கொண்டாலே பாதி சிக்கல் தீர்ந்துபோகும். ஆனால், நாமோ ஒன்று அனைத்தையும் நம் தலையில் போட்டுக்கொள்ள விரும்புகிறோம் அல்லது எதிராளை மொத்தமாக அடித்துச் சாய்த்துவிடுகிறோம். ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது?
அன்று சொன்னதுதான், ஈகோ. அதீதமான ஈகோவும் சரி, ஈகோவே இல்லாமல் இருப்பதும் சரி, நமக்குப் பிரச்சினைதான். அளவுக்கதிகமான ஈகோ, நம்மை எதையுமே பார்க்க விடாது, ஒப்புக்கொள்ள விடாது. ஈகோவே இல்லாமல் இருப்பதும் ஏறத்தாழ அதேபோலத்தான். இரண்டுமே நமக்கு நல்லதல்ல. சமையலில் உப்பு சரியான அளவு போடுகிறோமே அதுபோல, வாழ்வில் ஈகோ சரியான அளவு கலந்திருக்க வேண்டும். அதுவும் சண்டையின்போதோ, பிரச்சினையின் போதோ, தவறு யார் பக்கம் என்பதை எவ்வித கலர் கண்ணாடியும் இல்லாமல் பார்க்க வேண்டும். மன்னிப்புக் கேட்பதும், மன்னிப்பதும் வாழ்க்கையை நிம்மதியாக்குகிறது.
இதற்கு மாறாக, தேவையே இல்லாமல், சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்தி யுத்தமாகவே மாற்றிவிடுகிறோம். வாழ்க்கையில் அன்பும் உறவும் மனிதர்களும் தேவை. ஆனால், அதற்காக நம்மையோ, பிறரையோ பலிகடாவாக மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லையே!
[பழிபோட ஒரு பலிகடா!](https://minnambalam.com/k/2019/06/09/30)
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)
**
**
[எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?](https://minnambalam.com/k/2019/06/11/20)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”