zதீக்குளிக்க முயன்ற தேனி காவலர்கள் சஸ்பெண்ட்!

public

சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற, தேனி மாவட்ட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் மார்ச் 21ஆம் தேதி மாலை தேனி மாவட்டம் முதலாம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்களான கணேஷ், ரகு ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர். அவர்களை அருகில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, “2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறோம். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைத் தொடர்ந்து, 8 மாதங்களுக்கு முன் சொந்த மாவட்டமான தேனியில் பணி மாற்றம் பெற்றோம். ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் எங்களை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர். மேலும், உயரதிகாரிகள் சாதி ரீதியாகப் பணி ஒதுக்கீடு செய்தனர்” எனக் குற்றம்சாட்டினர்.

தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவர் மீதும் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரகு, கணேஷ் உட்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேனி எஸ் பி பாஸ்கரன் மார்ச் 22ஆம் தேதி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து, தற்கொலைக்கு முயன்ற கணேஷ், ரகு ஆகியோரை மெரினா காவல் நிலைய போலீஸார் அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஜாமின் கோரி இருவரும் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மார்ச் 23ஆம் தேதி மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களை சொந்த ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டது. தீக்குளிக்க முயற்சி செய்த காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எ பி பாஸ்கரன் அறிவித்தார்.

இந்நிலையில் தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு ஆகிய இருவரையும் தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *