zதிமுகவினர் சாராய ஆலைகளை மூடவேண்டும்: தமிழிசை

public

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஜூன் 2) தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இலவச மருத்துவ முகாமை திறந்து வைப்பதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார் தமிழிசை சவுந்தரராஜன்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “விரும்பாத ஒரு மொழியை திணிப்பது பாஜக அரசின் நோக்கமல்ல. விரும்பி ஒரு மொழியை கற்றால் அதை வரவேற்கும் நோக்கில் அரசு இருக்கிறது. அதுமட்டுமல்ல அதில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது.

மும்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றால் தமிழ் போன்ற இனிய மொழிகளை கற்க அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. இந்தி தமிழகத்தில் திணிக்கப்படாது. தமிழ் மீது உணர்வும், உயிரும் மற்றவர்களை விட பாஜகவுக்கு கூடுதலாகவே இருக்கிறது. மறுபடியும் இந்தியை வைத்து ஸ்டாலின் போன்றவர்கள் அரசியல் செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.

பின்னர் தூத்துக்குடி சென்ற தமிழிசைக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலையத்திலேயே தனது பிறந்தநாளை கொண்டாடிய தமிழிசை, கேக் வெட்டி கட்சியினருக்கு வழங்கினார்.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள்தான் சாராய ஆலைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சாராய ஆலைகளை லாப நோக்கம் இல்லாமல் முதலில் நீங்கள் மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்றால் நீங்கள் ஆலைகளை மூடிக் காட்ட வேண்டும். தேர்தலில் வெற்றிபெற்றால் சாராய ஆலைகளை மூடுவோம் என்று சொன்னீர்கள். ஆகையால், சாராய ஆலைகளை நடத்தி வரும் திமுகவினர் அவற்றை உடனடியாக மூட வேண்டும்” என்று கூறினார்.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ஆட்சிக் கவிழ்ப்பு: அட்வான்ஸ் கொடுத்த திமுக](https://minnambalam.com/k/2019/06/02/21)

**

.

**

[ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம்](https://minnambalam.com/k/2019/06/02/14)

**

.

**

[சுக்லாவை டிரான்ஸ்ஃபர் செய்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/02/17)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுடன் இணைப்பா? ஆய்வுக் கூட்டத்தில் தினகரன்](https://minnambalam.com/k/2019/06/01/68)

**

.

**

[கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி!](https://minnambalam.com/k/2019/06/02/8)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *