zதினம் ஒரு ஹோட்டல்: சென்னையின் ‘பேய் ஹோட்டல்’!

Published On:

| By Balaji

‘பலவீனமான இதயம் கொண்டவர்கள் போகவேண்டாம்’ என்ற அறிவிப்புடன் இந்த ஹோட்டலைப்பற்றி சொல்லத் தொடங்கலாம். அந்தளவுக்கு பயமுறுத்தும் உள்கட்டமைப்புகளைக் கொண்டது கிழக்கு அண்ணாநகர், இரண்டாவது மெயின்ரோடில் அமைந்திருக்கும் ஹௌண்டட் ஹோட்டல். திடீர் திடீரென்று பயமுறுத்தும் வகையானதல்ல இந்த ஹோட்டல். பார்க்க பார்க்க பயத்தைக் கிளப்பும் ஃபோட்டோக்கள், முகமூடிகள் என இந்த ஹோட்டலின் இண்டீரியர் டிசைன் பயங்கரமானது. அமானுஷ்யம் சம்மந்தமான படங்களில் ஆர்வமுள்ளவர்களெல்லாம், இந்த ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவதை ஆர்வத்துடன் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களது நண்பர்களை அழைத்துவரும் சுவாரஸ்யமும் அவ்வப்போது அரங்கேறும். சென்னையில், அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் இடங்களைப் பற்றிய வரலாற்றை தாங்கிக்கொண்டு நிற்கும் புகைப்படங்கள், படிக்கட்டுக்கு அருகில் வாய் பிளந்தபடி படுத்துக்கிடக்கும் முதலை என உள்ளே செல்வது முதல் வெளியே வருவது வரை ஒரு பேய்ப்படத்தைப் பார்த்த திகிலைத் தரும் இந்த ஹோட்டல் உணவுக்கும் பெயர்பெற்றது. ஹோட்டல்தான் கருப்பும் வெள்ளையும், சாம்பல் நிறமுமாகக் காட்சியளிக்குமே தவிர, இங்கு விற்பனைக்கிருக்கும் வண்ணவண்ண ஜூஸ்கள் ஹோட்டலின் ஃபேவரிட். வட இந்திய, சைனீஸ், அரேபிய உணவுகளை வழங்குகிறார்கள். மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த ஹோட்டல் திறந்திருக்கும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel