zதமிழில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்!

public

உச்ச நீதிமன்றத்தில் வெளியான 100 முக்கிய தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் ஆறு மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம், மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளைத் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சில நாட்களுக்கு முன்பு ரஞ்சன் கோகாயை சந்தித்து மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 17) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உச்சநீதிமன்றத்தில் வெளியான 100 முக்கியமான தீர்ப்புகளின் மொழிபெயர்ப்பை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்த தீர்ப்புகள் இப்போது பல்வேறு பிராந்திய மற்றும் இந்திய மொழிகளில் கிடைக்கும். இதன்மூலம் ஆங்கிலம் தெரியாத பல கோடிக்கணக்கான பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எளிமையாக தங்களுடைய மொழிகளிலேயே படித்துக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் பெரும்பாலான தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்”என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *