Zதமிழில் பேசத் தடை: தெற்கு ரயில்வே!

Published On:

| By Balaji

தமிழகத்தில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்ஸ் ஆகியோர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். ரயில் வந்து செல்வது தொடர்பான விவரங்களை தமிழில் பேசக் கூடாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவரும் நிலையில், இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு பயணிகள் ரயில் ஒரே பாதையில் சென்றதால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கு மொழி பிரச்சனைதான் காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது, தமிழ் தெரிந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் ரயிலை அவ்வழியில் அனுப்ப வேண்டாம் என்று தமிழில் சொன்னதாகவும், அதை இந்தி மட்டுமே தெரிந்த மற்றொரு ஸ்டேஷன் மாஸ்டர் தவறுதலாகப் புரிந்து கொண்டு அதே பாதையில் ரயிலை அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஒரே பாதையில் எதிர் எதிரே இரு ரயில்கள் இயக்கப்பட்ட நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், தெற்கு ரயில்வே அதிகாரி சிவா அனைத்து ரயில்வே கட்டுபாட்டு அலுவலகத்துக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும். ரயில்வே தொடர்பான விஷயங்களை பிராந்திய மொழியான தமிழில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதை தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வட மாநிலத்தவர்கள் நிறைய பேர் தென்னக ரயில்வே துறையில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை இது நிரூபிப்பது போல் உள்ளது. இந்த சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல், இத்தகைய செயல்களில் இனிமேலும் ஈடுபடக்கூடாது” என்று திமுக எம்.பி கனிமொழி எச்சரித்துள்ளார்

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share