பேராசிரியர் ஜனகராஜன் நேர்காணல் 2: நரேஷ்
தண்ணீர்ப் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் சார்பில் என்னென்ன தீர்வுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன?
அரசாங்கம் செயல்படுத்துவதையெல்லாம் தீர்வுன்னே சொல்லமுடியாது. பிரச்சனை வந்துச்சுன்னா, அன்னைக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செஞ்சிடுறாங்க. பிரச்சனை என்னன்னு புரிஞ்சிக்கிறதே இல்ல. அதுக்கு 100 கோடி, இதுக்கு 200 கோடி, 500 கோடில குடி மராமத்துன்னு இஷ்டத்துக்கு லாபி பண்ணுவாங்க. இதெல்லாம் பெரிய அளவிலான செயல்கள் மாதிரி தெரியும். ஆனா, இதனால எந்த பயனும் இல்லை. இது தொடர்ந்ததுன்னா, Sub-zero என்கிற எடத்துக்கு நாம போயிடுவோம். Day zero வுக்கும் கீழே இருக்க நிலமை அது.
**’Day zero’ என்பதை எப்படி வரையறுக்குறீர்கள்? சென்னைக்கு இந்த நிலை வர எத்தனை காலம் ஆகும்?**
நிலத்தடி நீரே சுத்தமா இல்லாம போயி, கடல் நீர் உட்புகுவதை நாம Day zeroனு நாம புரிஞ்சுக்கலாம். ஆனா அந்த நிலையை சென்னை அடையாது. ஏன்னா இங்க தண்ணி இல்லைன்னா, பக்கத்துலையே இருக்க கடல்நீரை குடிநீராக்கிக் குடுப்பாங்க. மத்த ஊர்கள்ல இருந்து தண்ணி கொண்டு வருவாங்க. இந்த ரெண்டு முறைகளுமே Day zero என்பதை விட மிகப் பெரிய Ecological Disaster (சூழல் சீரழிவு). கடல்நீரைக் குடிநீராக்கிக் குடிக்கிறது நம்ம உடம்புல எவ்ளோ சிதைவுகளை உண்டாக்கும் என்பதையெல்லாம் நாம கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. மத்த ஊர்கள்ல இருந்து ‘கூட்டுக் குடிநீர் திட்டம்’ மூலமா கொண்டு வரப்படுற தண்ணீர் எல்லாம் பிச்சை எடுத்து சாப்பிடுறதுக்கு சமம்!
நாம கண்டுகொள்ளாத ஒரு எளிமையான உண்மையை சொல்லுறேன். நம்மால ஒரு காலத்துலயும் ஒரு ஏரியை உருவாக்க முடியாது. அதுக்கான வடிகால்கள், கிளை வாய்க்கால்கள்னு அதோட துணை வேலைகளே ஆயிரம் இருக்கு. இருக்குற ஏரியை அழிக்கிறதுக்கு நமக்கு உரிமை கிடையாது. ஒரு ஏரி உருவான இடத்துல மட்டும்தான் அது இருக்க முடியும், வேறு எடத்துல அதை உருவாக்க முடியாது. இந்த மாதிரி அமைப்பை நீரியல் துறையில ‘Watershed’னு சொல்லுவோம். பல ஆயிரம் வருடங்களா உருவான ஏரியை, இப்போ இருக்க நவீன கட்டமைப்புகள்னால உருவாக்க முடியாது. ஒரு சதுப்பு நிலம் உருவாக எத்தனை லட்சம் வருடங்கள் ஆகும் தெரியுமா? அதை எவ்ளோ சாதாரணமா மண்ணைக் கொட்டி மூடி பில்டிங் கட்டுறோம்! நீங்க நீர்நிலையைக்கூட உருவாக்கிடலாம். ஆனா சதுப்பு நிலத்தை எப்படி உருவாக்குவீங்க? சதுப்பு நிலங்கள் என்பவை இயற்கை நமக்குத் தந்த பரிசு. அதை மீட்டுருவாக்கம் செய்யுற தொழில்நுட்பத்தையெல்லாம் எந்தக் காலத்துலையும் உருவாக்க முடியாது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த வருஷம் இன்னும் அதிகமான பிரச்சனைகளை சந்திப்போமே தவிர, தப்பிக்க எந்த வழியும் கிடையாது.
**இப்போ தப்பிக்க நம்ம கிட்ட இருக்க வழிகள் என்னென்ன? நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?**
முதல்ல கவனிங்கன்னு சொல்லுறேன். எப்படி கவனிக்கலாம்? மூணு தரவுகள் மூலமா கவனிக்கணிம்.
1) மழை அளவைக் கணக்கிடுதல் (Rainfall accounting)
ஒவ்வொரு வருஷமும் பெய்யுற மழையின் அளவு என்னன்னு நமக்குத் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் வெச்சிருக்க தகவலை சாமானியர்கள் தெரிஞ்சிக்கணும்.
2) தண்ணீர் பயன்பாடு கணக்கு (Water Auditing.)
நமக்கு எவ்ளோ தண்ணீர் வந்திருக்கு, நாம எவ்ளோ செலவு பண்ணிருக்கோம் என்கிற கணக்கு. இதை நாம சரியா கணிச்சு தெரிஞ்சு வெச்சிக்கணும். அதுல எவ்ளோ தண்ணி சேமிச்சு வெச்சிருக்கோம், எவ்ளோ வீணாச்சு எனும் தகவல் நமக்கு வேணும்.
3) எடுப்பதும் கொடுப்பதும் (Discharge and Recharging)
உலக அளவுல இது மிகப் பெரிய குற்றம். ரொம்ப முக்கியமா நாம பாக்க வேண்டிய விஷயம், பயன்படுத்தின தண்ணீரை நாம என்ன பண்ணுறோம் அப்டீங்கிறது. பயன்படுத்துன நீரை சாக்கடையா பக்கிங்காம்லையும் அடையாத்துலையும் கூவத்துலையும் விடுறோமேனு நமக்கு உறுத்தல் வேணாமா? எடுத்த தண்ணிய திரும்ப குடுக்கணும்னு நமக்கு தோண வேண்டாமா? உலகமே இன்னைக்கு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதைத் தீவிரமா செயல்படுத்திட்டுவருது. நாம அதை பத்திப் பேசவே இல்லையே! வர்ற தண்ணிய பயன்படுத்தாம, சேமிக்காம வீணடிக்கிறது ஒரு குற்றம். பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சாக்கடையாக்குவது இரண்டாவது குற்றம். மிகச் சாதாரணமான இந்த இரண்டு செயல்பாடுகளை முன்னெடுக்காம நாம தீர்வைப் பற்றி பேச முடியாது.
**இந்தத் தவறை சான்றுகளா, தரவுகளா சொல்ல முடியுமா?**
தாராளமா…! இன்னைக்கு நமக்கு மெட்ரோ வாட்டர் மூலமா கிடைக்கிற தண்ணி 700 மி.மீ. ஆனா, ‘Sewage Generation’ 1100 மி.மீ. ஆக இருக்கு. வெளியிருந்து வர்ற தண்ணீர், குடியிருப்புகளே போர் போட்டு உறிஞ்சுற தண்ணீர் இவையெல்லாம் சேர்ந்துதான் இவ்ளோ கழிவுநீரா கடல்ல கலந்துவிடப்படுது. இந்தக் கழிவுநீர்ல இருந்து 60-70 சதவிகித நீரை நாம மறு உற்பத்தி (Re-generate) செய்யலாம். இந்த மறு உற்பத்தி என்பது 500-600 மி.மீ நீரை நாம மீட்டெடுக்குறதுக்கு சமம்.
**இந்த மறுசுழற்சிக்கு அதிகமான செலவாகும் என்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறதே..?**
அதெல்லாம் பொய். கடல்நீரைக் குடிநீராக்கும் ‘Sea water Desalination project’ஐவிட இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு என்பது ரொம்ப கம்மியான செலவுல செயல்படுத்தக்கூடியது. இன்னொரு விஷயம், இதில் சூழல் சீர்கேடுகளும் தடுக்கப்படுது. இந்த மறுசுழற்சி நடவடிக்கை மூலமா நாம டன் கணக்குல இயற்கை உரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதை நாம இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தலாம். இந்த மாதிரி எளிமையான தீர்வுகளைச் செயல்படுத்தாம, தண்ணி இல்லைங்கும்போது கண்ணை மூடிக்கிட்டு கல்குவாரியிலிருந்து தண்ணி கொண்டுவருவது, வீராணத்துக்கு பைப் போடுறது, Inter-linked Water Transfer-னு பொழப்ப கெடுக்குறது, கோதாவரியை சென்னைக்குத் திருப்பிவிடுங்கனு சொல்றதெல்லாம் தூய்மையான பித்தலாட்டம்!
(மேலதிகப் பித்தலாட்டங்களைத் தோலுரிப்போம்….)
[மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/9)
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.�,”