zசென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஐந்து உணவகங்கள்!

Published On:

| By Balaji

நாட்டில் மிகப் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிதாக ஐந்து உணவகங்கள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் ரயில்வே அதிகாரிகள்.

சென்னை நகரத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்வதற்கு மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்குவது சென்ட்ரல். இரண்டரை ஆண்டுகள் ஆகியும், இங்கே உணவகம் ஏதும் இல்லாத நிலையே தொடர்கிறது. “தற்போது இந்த நிலையை மாற்றி அமைக்கும் வகையில் புதிதாக ஐந்து உணவகங்கள் திறக்கப்படவுள்ளன. அதில் இரண்டு உணவகங்கள் அடுத்த 30 நாட்களுக்குள் நடைமுறையில் வரும்” என மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் நிலையத்துக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், விரைவில் உணவகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் உணவகங்கள் அமைப்பதற்கான டெண்டரை இறுதி செய்துள்ளது. இந்த உணவகங்களில் சந்தையில் விற்கப்படும் விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்படும். பிரியாணி, பீட்சா மற்றும் தென் இந்தியா உணவுகள் அனைத்தும் இதில் அடங்கும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்போதுள்ள புத்தக விற்பனை நிலையம் அருகே அடையார் ஆனந்த பவன் உணவகமும், நடைமேடை ஒன்றில் ஜெ.எஸ். கேட்டர்ஸ் உணவகமும் அமையவுள்ளது. இந்த இரண்டு உணவகங்களின் செயல்பாடும் ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரும்.

இரண்டாவது நடைமேடையில் முஸ்தபா கேட்டர்ஸ் உணவகமும், மூர் மார்க்கெட் அமைந்திருந்த இடம் அருகே ஒரு உணவகமும் அமையுள்ளன என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share