zசெத்தவருக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்!

Published On:

| By Balaji

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் நூறாவது நாளன்று மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த மே 22ஆம் தேதியன்று நடந்த பேரணியின்போது, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், போராட்டத்தில் பங்கேற்ற 13 பேர் பலியாகினர். இது தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவரான கிளாஸ்டன் என்பவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், அரசு அமைக்கும் ஆணையங்களை மக்கள் நம்பவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share