zகொடி பறக்குதா, புரளி பறக்குதா?: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆபீஸ்ல கொடி ஏத்தி வச்சிருக்காரு ம.நீ.ம தலைவர் கமல். அதுமட்டுமில்லாம ஆல்ரெடி கட்சியில இருந்த உயர்நிலைக்குழுவையும் கலைச்சு புதுசு புதுசாக போஸ்டிங்குகளையும் கொடுத்துருக்காரு. சரி இன்னைக்கு இந்த மேட்டர்தான் சோஷியல் மீடியாவுல ட்ரென்டிங்க்ல வரும்போலன்னு பாத்தா அதுதான் இல்லை.

சம்பந்தமே இல்லாம ரஜினியோட மக்கள் மன்றத்துல இருந்து ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டிருக்கார்னு யாரோ கிளப்பிவிட இப்ப அந்த மேட்டர்தான் டாப்புல போயிக்கிட்டு இருக்குது. இந்த புரளி, கமலை டம்மியாக்க ரஜினி ரசிகர்கள் கிளப்பி விட்டதுன்னு ஒரு பக்கம் சொல்றாங்க. ரஜினியை டம்மியாக்க கமல் ரசிகர்கள் பண்ணி விட்டதாக இன்னொரு பக்கம் சொல்லிட்டு இருக்குறாங்க. இதுக்கு இடையில, ரஜினியும் கமலும்தான் ஹாட் டாபிக்காக இருக்கணும்னு ரெண்டு பேருமேதான் இதை பிளான் பண்ணிப் பண்ணுறாங்கனு மத்த கட்சிக்காரங்க வேற சொல்றாங்க. எது உண்மைனுதான் தெரியல.

ஆனா ஒண்ணுங்க. உண்மையைவிட பொய்தான் வேகமாகப் பரவும்னு சொல்வாங்க இந்த விஷயத்துல அது அப்படியே நடக்குதுங்க, அப்படியே நடக்குது… ஹ்ம்ம். அப்டேட் படிச்சுக்கிட்டு இருங்க புதுசா என்ன புரளி கிளம்பி இருக்குதுனு பார்த்துட்டு வந்துடுறேன்.

**@Kozhiyaar**

ஹாஸ்டலுக்கு போய் தன் துணியை தானே துவைத்து கடுப்பான ஆண் தான் ஜீன்ஸ் பேண்ட்டை கண்டுபிடித்திருக்க வேண்டும்!!!

**@mekalapugazh**

போன தலைமுறையின் தற்கொலைகள்தான் இந்தத் தலைமுறையின் மண விலக்காக உருமாறியிருக்கின்றன..

இந்த மாற்றத்துக்குக் காரணம் பெண்களின் சுயமரியாதை உணர்வு.. அதை வளர்த்தெடுத்தது பெண்கல்வியும் வேலைவாய்ப்பும்..

**@saattooran**

மழை நேரத்தில், தெருவோரம்,

விற்பனை பொருட்களும் நனைந்து,

தானும் நனைந்துள்ள வியாபாரியிடம்,

அடிமாட்டு விலையில் பொருள் வாங்க நினைக்காதீர்.

**@gips_twitz**

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் படப்பிடிப்பு முடிந்த பின், ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் களமிறங்குகிறார்

– தமிழருவி மணியன்

அது நீங்க நினைக்குற மாதிரி கட்சி ஆரம்பிச்சு பண்ற அரசியல் இல்ல படத்துக்கு ப்ரமோட் பண்ற அரசியல்

**@Kozhiyaar**

நான் சொல்வது தவறு என்று நீங்கள் சொல்வதற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்க முடியாது!!!

**@navnetha **

மழையிலே வண்டி இலவசமா வாட்டர் வாஷ் ஆகுதுன்னு சந்தோசப்பட்டா மழை நின்ன பிறகு வெளியே போகும் போது

மறுபடியும் சேறாகுது.

ஓ மை ஜக்கம்மா !

**@mohanramko **

மக்களை ‘வழி’க்கு கொண்டு வருவதாக நினைத்து, சாலையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது அரசு

**@sThivagaran**

‘ஏன் இவர்கள் இப்படி’

என்று புலம்புவதை விடுத்து

“அவர்கள் அப்படித்தான்”

என்றபடி கடந்துவிடுங்கள்.

வாழ்க்கை எளிதானது தான்!

**@ஜெ.வி.பி **

ஆமா, தமிழ்ப்படம் 2 வை எந்தப்படத்தோட காப்பின்னு சொல்லுவாங்க?

**@Thaadikkaran**

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் படப்பிடிப்பு முடிந்த பின் ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் களமிறங்குகிறார் – தமிழருவி மணியன்

அப்போ, கார்த்திக் சுப்புராஜ் படம் லேட்டாகும்னு சொல்லுங்க..!

**@Soorpanagai**

அழகாய் பின்னிய சிகை அலங்காரத்தை கலைக்காத வரை .. அந்த காற்று,.. பிடித்திருந்தது எனக்கும்..!!

**@iam_susi**

சாக்லேட்டுக்கு பதிலாக வேர்க்கடலை சாப்பிடலாம் – தமிழிசை.

பிஜேபிக்கு பதிலாக நோட்டாவுக்கு ஓட்டு போடலாம் – மக்கள்.

**@sultan_Twitz**

மத்திய அரசுக்கும் எங்களுக்குமான உறவு தாய்க்கும் குழந்தைக்குமான உறவை போன்றது – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அப்போ இதே வாயால அவங்களை அம்மா அம்மான்னு மூச்சுக்கு முந்நூறு தடவை கூப்டிங்களே அத்தனையும் நடிப்பா கோப்பால்!!

**@HAJAMYDEENNKS**

செல்ஃபி எடுக்குறதுக்காக குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சாப்பிட போறவங்க அதிகமாகிட்டாங்க !

**@nandhu_twitts **

நாடு முழுவதும் விவசாயத்திற்கு முன்னுரிமை – மோடி

பல நாட்டுக்கு போறிங்க எந்த நாடுனு சொன்னா தெரிஞ்சுக்குவோம்..!!

**@Giri47436512**

“பொய்” நிற்பதற்கு

“துணைக்கால்” வேண்டும்!!!

“உண்மை”யோ

“மெய்”யோ நிற்பதற்கு

எந்த “காலும்” தேவையில்லை…

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share