கேழ்வரகில் கிட்டத்தட்ட 60 வகைகள் உள்ளன. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் ‘கேழ்வரகுத் திருவிழா’ எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
**என்ன தேவை?**
கேழ்வரகு – ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
கேழ்வரகைச் சிறிது நேரம் ஊறவைத்து சுத்தமான துணியில் பரப்பி வெயிலில் நன்கு காயவிடவும். பிறகு மிக்ஸியில் சேர்த்துப் புட்டு மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதில் லேசாகத் தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
**என்ன பலன்?**
கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகில் செய்யப்படும் இதை, ஆவியில் வேகவைத்துச் செய்வதால் கேழ்வரகில் உள்ள அனைத்து சத்துகளும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும். எளிதில் ஜீரணமாகக்கூடியது. அனைவருக்கும் ஏற்றது.
[நேற்றைய ரெசிப்பி: கேழ்வரகு தித்திப்பால்](https://minnambalam.com/k/2019/07/11/5)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!](https://minnambalam.com/k/2019/07/11/76)**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!](https://minnambalam.com/k/2019/07/11/48)**
�,”