Zகிச்சன் கீர்த்தனா: ஆலு பனீர் சாட்

Published On:

| By Balaji

கிட்ஸ் ஸ்பெஷல்: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு

பள்ளி நாள்களில் உணவு கொடுத்து அனுப்பினால் நண்பர்களுடன் சேர்ந்தோ, ஆசிரியரின் கண்டிப்பினாலோ சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால், விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது குழந்தைகளைச் சாப்பிட வைப்பது மிகவும் சிரமமான காரியம். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரே பொருளால் ஆன உணவுக்குப் பதிலாக இரு பொருட்களால் ஆன உணவைச் சமைத்துக்கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

**என்ன தேவை?**

சிறிய பனீர் துண்டுகள் – அரை கப்

சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் (வேக வைத்தது) – அரை கப்

வெங்காயம் – ஒன்று

பட்டாணி, கேரட் துண்டுகள் – தலா கால் கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்

சாட் மசாலா பவுடர் – கால் டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு

எண்ணெய் – 4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பனீர் துண்டுகளைப் போட்டு வதக்கி, லேசான பிரவுன் கலர் வரும்வரை சூடுபடக் கிளறி எடுக்கவும். உருளைக்கிழங்கு துண்டுகளையும் வதக்கி எடுக்கவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி… நறுக்கிய வெங்காயம், பட்டாணி, கேரட் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். எல்லாக் காய்களும் வெந்ததும் பனீர், உருளைக்கிழங்கு துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து இறக்கிவிடவும். கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

**என்ன பலன்?**

புரதம், பாஸ்பரஸ், அதிக அளவு கால்சியம் போன்ற சத்துகள் பனீரில் அதிகம் இருப்பதால் உடலுக்கு பலம் கிடைக்கும். பல் சிதைவு, ஈறு பிரச்சினைகள், மூட்டு பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியதாகவும் பனீர் இருக்கிறது. உருளைக்கிழங்கு மாவுப் பொருள். சமைக்கும்போது இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)

**

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

**

[பலித்தது மின்னம்பலம் – மக்கள் மனம் – ஒரு சோறு பதம்!](https://minnambalam.com/k/2019/05/24/31)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share