Zகார் 3: சாகசத்துக்கு தயாராகுங்கள்!

public

அனிமேஷன் பட ரசிகர்களுக்கு Cars 3 திரைப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் எண்டெர்டையின்மெண்ட் காத்துக் கொண்டிருக்கிறது. படத்தின் நாயகன் Lightning McQueen நம் அனைவரையும் ஒரு உணர்வுப்பூரவமான ரேஸுக்கு அழைத்துச்செல்ல இருக்கின்றார். Cars மற்றும் Cars 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது. சிறு வயதில் கையில் வைத்து விளையாடிய கார்கள், கார்டூனாக வருவதால் சிறியவர், பெரியவர் என அனைத்து தரப்பு மக்களிடமும் படத்துக்கு எதிர்பார்ப்புகள் உண்டு.

Toy Story, Bug’s Life, Inside Out, Finding Nemo போன்ற பிரபலமான ஹாலிவுட் படங்களை இயக்கிய ஜான் லெஸ்ஸட்டர், இப்படத்தின் முந்தைய இரண்டு பாகங்களையும் இயக்கினார். ஆனால், மூன்றாவது பாகத்தில் அவர் கதை மட்டும் எழுத, பிரையன் ஃபீ இயக்கியிருக்கிறார். எதிலும் துறுதுறுவென வேகமாக இயங்கும் படத்தின் நாயகன் McQueen,டிரெயிலரில் காண்பித்த வரையில் தனது பழைய வாழ்க்கையை இழந்து நிற்கிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக ரேஸ்களில் கலந்துகொள்ள மறுக்கிறார். ஆனாலும், கதாநாயகன் கடைசியில் ரேஸில் கலந்துகொள்வார் என்றாலும் அதற்கு இடைபட்டதில் உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கின்றது என்பதை டிரெயிலர் பிரதிபலிக்கின்றது. மேலும், படத்தில் புது வில்லனாக ஜேக்ஸன் ஸ்டோர்ம் என்பவர் இப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். ஜூன் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் பல சாகசங்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.