zகழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 7 பேர் பலி!

Published On:

| By Balaji

குஜராத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுய் எனும் கிராமம் உள்ளது. நேற்று (ஜூன் 14) இரவு இங்குள்ள தர்ஷன் ஹோட்டலில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் வேலை நடைபெற்றது. அப்போது விஷ வாயு தாக்கியதில் மகேஷ் பதன்வாடியா, அசோக் ஹரிஜன், பிரிஜேஷ் ஹரிஜன், மகேஷ் ஹரிஜன் ஆகிய தொழிலாளர்கள் பலியாகினர். அந்த ஹோட்டலில் பணியாற்றி வந்த விஜய் சவுத்ரி, சக்தேவ் வாசவா, அஜய் வாசவா ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இது குறித்து விசாரணை செய்தனர் தாபோய் போலீசார். ஹோட்டல் உரிமையாளர் ஹாசன் அப்பாஸ் போரானியாவின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று கூறி, இன்று காலையில் அவரைக் கைது செய்தனர். பணிக்கு வந்த தொழிலாளர்களில் முதலில் மகேஷ் பதன்வாடியா கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியுள்ளார். உள்ளே சென்றபிறகு அவரிடம் இருந்து பதில் வராததால், அவரைக் காப்பாற்றும் நோக்கில் மற்றவர்கள் ஒவ்வொருவராக உள்ளே இறங்கிப் பலியாகினர்.

தாபோய் நகராட்சியில் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்தவர்களை வெளியே எடுப்பதற்கான உபகரணம் ஏதும் இல்லை. இதனால், வதேதரா தீயணைப்பு நிலையத்தில் இருந்து உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு 7 சடலங்களும் வெளியே எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர் தீயணைப்புத் துறை அதிகாரிகள்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share