Zஐபிஎல்: ஒரு ஓவருக்கு ஏழு பந்துகள்!

Published On:

| By Balaji

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அனி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது ஆட்டத்தில் இன்று (மார்ச் 30)ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. அதன்படி, துவக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மாவும் குயிண்டன் டிகாக்கும் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். 5.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 51 ரன்களாக இருந்தபோது ரோஹித் ஷர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், கீரான் பொல்லார்டு ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். குயிண்டன் டிகாக் மட்டும் பொறுப்புடன் ஆடி 39 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா வழக்கம்போல இறுதி ஓவர்களில் அதிரடி காட்டினார். அவர் 19 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் இப்போட்டியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், முகமது சமி மற்றும் ஹர்டஸ் வில்ஜியோன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அம்பயர்களின் முடிவுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் நிலையில் இன்றைய போட்டியில் மேலும் ஒரு சர்ச்சை உருவானது. அதிலும் ரவிச்சந்திரன் அஸ்வினே சம்பந்தப்பட்டுள்ளார். அவர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் மொத்தம் ஏழு பந்துகள் வீசப்பட்டுள்ளன. அஸ்வின் வீசிய ஏழாவது பந்தில் டிகாக் பவுண்டரி அடித்திருந்தார். அந்த ஓவர் வீசப்பட்டபோது முதல் பந்து டெட்பாலாக அறிவிக்கப்பட்டதை அஸ்வினும் பேட்ஸ்மேனும் அப்போது கவனிக்கவில்லை. அஸ்வின் வீசிய முதல் பந்தில் பேட்ஸ்மேன் தயாராகவில்லை என்பதால் அப்பந்து ’டெட் பாலாக’ எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

177 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கி பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களான கேல்.எல்.ராகுல் நிதானமாகவும், கிறிஸ் கெய்ல் அதிரடியாகவும் ஆடினர். 24 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களை விளாசிய கெய்ல் 40 ரன்களில் குருனல் பாண்டியா பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share