Zஎளிதாகிய சரக்குகள் போக்குவரத்து!

public

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் சரக்குகள் போக்குவரத்து நடவடிக்கை எளிதாகியுள்ளதாகவும், அதன் மூலம் அரசுக்குப் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களுக்கு இடையே சரக்குகள் எடுத்துச் செல்லப்படுவதை எளிமையாக்கும் விதமாக சோதனைச் சாவடிகள் அனைத்தும் அதிரடியாக நீக்கப்பட்டன. இதனால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சோதனை செய்யப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதால் சரக்குகள் போக்குவரத்து எளிதாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட சுதந்திர தின விழா உரையில், ”10க்கும் மேற்பட்ட பலவிதமான மத்திய மாநில அரசுகளின் வரிகளை ஒன்றிணைத்து ஒரே வரி முறைக்கு மாறியுள்ளோம். இது ஜூலை 1 முதல் சிறப்பான முறையில் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் தொழில் நடைமுறைகள் அனைத்தும் எளிமையாகியுள்ளன. இதற்குத் தொழில்நுட்ப வசதிகள் மிகவும் பக்கபலமாக இருந்தன. ஜி.எஸ்.டி. நடைமுறைக்குப் பிறகு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பயண நேரம் 30 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகிறது. இந்தச் சரக்கு மற்றும் சேவை வரி அமலானதற்கு நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களின் ஆதரவே காரணம். மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைந்த கூட்டு பரஸ்பரம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்று பேசினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0