�
இந்திய நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், பிரியங்க சோப்ரா, அமலா நாகார்ஜூனா, கிரிக்கெட் முன்னால் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, முகம்மது கைஃப், தொழிலதிபர் அனில் அம்பானி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் எனப் பல பிரபலங்கள் தூய்மை இந்தியா என்ற திட்டத்தில் தங்களை ஆரம்பத்தில் இனைத்துக் கொண்டனர். இவர்களைத் தவிர மற்ற பிரபலங்கள் மற்றும் இளைய சமூகத்தினர் தூய்மைப் படுத்துவது போல், தங்களது புகைப்படங்களை சமூக வலைத் தலங்களில் பதிவிட்டு தங்களின் பங்கினை வெளிப்படுத்தினர். தற்போது அந்தத் திட்டம் என்ன ஆனது என்பது ஒரு புறமிருக்க…
பாலிவுட்டின் பிரபலமான நடிகராக இருப்பவர் அக்ஷ்ய் குமார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் உடன் பங்கேற்றார். அப்போது பேசிய அக்ஷ்ய் குமார், ‘குறைந்தது 500 மீட்டர் அல்லது ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் மொபைல் டாய்லெட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தூய்மைக்கு வழி வாகை செய்யும். மேலும் இதை ஆப்ஸ் மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். கிராமப்புற பெண்கள், பொது டாய்லெட் பயன்படுத்துவதில் மிகுந்த சிரமம் உள்ளது, அவர்களுக்கு உதவும் வகையி மொபைல் டாய்லெட்டை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
இது போன்ற அறிவிப்புகள் தங்களை மேலும் பிரபல படுத்திக் கொள்ளவா அல்லது உண்மையிலும் இது போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.�,