அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவோம் என்று தீபா பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட தீபா பேரவையின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற பேரவையின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையிலான கட்சியை துவங்கி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்ட வலியுறுத்துவது, அதிமுக ஆட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கொடியையும் தீபா கைப்பற்றுவதற்கு பேரவையினர் அனைவரும் உறுதுணையாக இருப்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.�,