இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்றழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்ததினம் இன்று. இதைக் கெளரவிக்கும்விதமாக நேற்று நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், அம்பேத்கர் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்பட்டது. பிரதமர் மோடி இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பேத்கர் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார். அதில், ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஒரு பல்துறை வித்தகர். அவர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சேவைச்செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். டாக்டர் அம்பேத்கர் கல்வியின் ஆற்றல்மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். முற்றிலும் வேறுபட்ட அவரது பொருளாதாரப் பார்வை, விவசாய மற்றும் தொழிலாளர்களின் நலம் பேணப்படுவதை வலியுறுத்தியது’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.�,
zஇன்று -அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்ததினம்.
+1
+1
+1
+1
+1
+1
+1