ஆர்யாவுக்குத் திருமணம் எப்போது என்று இந்திய அளவில் விவாதப்பொருளாக மாறியது அவர் திருமணம். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடி, கடைசியாக சாயிஷாவை திருமணம் செய்துகொள்வதாக அவரே தனியாக முடிவெடுத்தார். ஆனால், வடக்கில் அம்பானி மகன் திருமணம் வெகு ஜோராக நடைபெற்றதால், ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்யா – சாயிஷா திருமணத்தை வெகுவாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் ஹைதராபாத்திலுள்ள வீட்டில் ஆர்யா – சாயிஷாவின் திருமண வேலைகள் மார்ச் 9ஆம் தேதி தொடங்கின.
நேற்று (மார்ச் 10) ஹைதராபாத்திலுள்ள ஒரு ஹோட்டலில் இவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தத் திருமண விழாவுக்கு வந்திருந்தனர்.�,”