டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் பட்டாசுகள் விற்க அக்டோபர் 31ஆம் தேதி வரை தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் ஆன் லைன் மூலம் பட்டாசுகள் வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
டெல்லியில் வரும் 19ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில், பட்டாசு வெடிப்பது குறித்து ஏதும் கூறப்படவில்லை. அதனால், அண்டை மாநிலங்களிலிருந்தும், ஆன் – லைன் மூலமாகவும், பட்டாசு வாங்குவது அதிகரித்துள்ளது.
“உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பட்டாசு விற்பனை குறித்து மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆன் – லைன் மூலமாக வாங்குவதிலும் சிக்கல் உள்ளது. விற்பனை செய்யும் நிறுவனம், பெங்களூரில் செயல்பட்டாலும், விற்பனை செய்யக்கூடிய இடம் டெல்லி என்பதால், அதற்குத் தடை உள்ளது. அதே போல், டெல்லியில் இருந்து செயல்படும், ஆன் – லைன் நிறுவனம், எந்த ஊருக்கும் பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாது” என வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டு சிவகாசியிலும் ஆன்-லைன் பட்டாசு விற்பனை தீவிரமாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை ரூ.100 கோடியை எட்டியது. இந்த ஆண்டு ஆர்டர்கள் அதிகமாக உள்ளதால் ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை சுமார் ரூ.300 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
�,