நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் படங்களுக்கு கட்டுப்பாடுகளையும், ஒழுங்குமுறைகளையும் விதிக்க வேண்டுமென்று பல தரப்புகளிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று (ஜூலை 18) டெல்லியில் ஜக்ரான் திரைப்பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய பிரகாஷ் ஜவதேகர், “நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் வெளியாகும் படங்கள் கண்காணிக்கப்படுவதில்லை எனவும், தணிக்கை செய்யப்படுவதில்லை எனவும் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நிச்சயமாக விவாதிக்க வேண்டும். ஆனால் தொழிற்துறையை சேர்ந்த நிறுவனங்களிடம் ஆலோசித்த பிறகே இவ்விவகாரத்தில் முடிவெடுக்க முடியும்.
சினிமா என்பது மக்களின் ஊடகம். அது மக்களின் ஊடகமாகவே தொடர்ந்து இருக்கும். அதில் எந்த இடையூறையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். நல்ல திரைப்படங்களை உருவாக்கி அவற்றை மக்களுக்காக காட்சிப்படுத்துங்கள். வெளிநாடுகளில் பாலிவுட் திரைப்படங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. சினிமாவே ஒரு மென்மையான அதிகாரம்தான்.
இந்திய திரைப்படங்களின் முழு திறனும் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. சினிமா நமது வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. சினிமாவால் மக்கள் இணைந்துள்ளனர். சினிமாவின் அதிகாரம் மிகவும் அவசியமானது” என்று தெரிவித்தார். இவ்விழாவில் அனில் கபூர், ஃபராஹ் கான், கத்தான் மேத்தா, ஷோபு யர்லகட்டா போன்ற திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”