�அரியானாவில் `ஜாட்’ மக்களின் போராட்டத்தால் வதந்திகள் பரவுவதை தடுக்க இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அரியானாவில் மீண்டும் ‘ஜாட்’ போராட்டம் நடந்து வருவதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘ஜாட்’ இனத்தவர் நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பொது மற்றும் தனியார் சொத்துகள் சூறையாடப்பட்டன. இதையடுத்து ‘ஜாட்’ இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க முதல்வர் கட்டார் தலைமையிலான அரியானா அரசு முன்வந்தது. ஆனாலும் ‘ஜாட்’ தலைவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறவும், இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும் மீண்டும் ‘ஜாட்’ இனத்தவர் போராடி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டம் குறித்து வதந்தி பரப்பியதாக ஒருவர் தேச துரோக வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தவறான தகவல்கள் பரவி அதன்மூலம் வன்முறைகள் நிகழாமல் தடுக்க பதற்றமான பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பான தகவல்களை பெறவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் சண்டிகரில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரோஹ்டாக், சோனிபட், ஹிசர் உள்ளிட்ட பதற்றமான மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. தற்போது, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் ராம் நிவாஸ் கூறி இருக்கிறார்.�,
Zஅரியானாவில் இணையதள சேவை முடக்கம்
+1
+1
+1
+1
+1
+1
+1