zஅத்தனையும் தேவையில்லாத ஆணியா: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

சரி ஆனது ஆயிப்போச்சு.. அடுத்து நடக்கவேண்டியதை பாருங்கன்னு ஒரு இணைய நண்பர் காலையிலேயே இன்பாக்ஸல வந்து ஆறுதல் சொன்னாரு. நமக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே ஏன் இப்படி கேட்காருன்னு யோசிச்சுட்டு அவருட்டயே கேட்டேன். அப்ப தான் எலெக்‌ஷன் ரிசல்ட் இப்படி ஆயிருச்சேன்னாரு. யாரு ஜெயிச்சாலும் தோத்தாலும் இந்த குமாரு செய்ய வேண்டியதை சிறப்பா செஞ்சுருவான்னு சொன்னேன்.

மோடியை தாக்கி மீம்ஸ் போட்டவங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு விசாரிச்சேன். அதுக்கு அவங்க சொல்றாங்க, மோடிக்கு பிரதமர் பதவி அஞ்சு வருசம் நீட்டிப்பு செஞ்ச மாதிரி இவங்களுக்கும் மீம் போடுற வேலை அஞ்சு வருசம் நீட்டிப்பு பண்ணிருக்காங்களாம். தினம் ஒரு கண்டண்ட் மிஸ் ஆகாம வந்துருமாம்.

தம்பி பாத்தீங்கள்ல 38ஐ தூக்கிட்டோம்லன்னு ஒரு உடன்பிறப்பு வந்தாரு அப்ப பார்த்து, நீ புடுங்குறது பூறாம் தேவையில்லாத ஆணி தான்னு வடிவேலு காமெடி டிவியில ஓடிகிட்டு இருந்துச்சு. காமெடியை பார்த்துட்டு திறு திறுன்னு முழிச்சுட்டு போயிட்டாரு.. அப்டேட்டை பாருங்க.. அவரு என்ன சொல்ல வந்தாருன்னு கேட்டுட்டு வாரேன்..

**@HAJAMYDEENNKS**

கமல் வெள்ளையாக இருப்பதால் மக்கள் நம்பிவிட்டார்கள்! ‘ – சீமான் #

பவர்ஸ்டார் சீனிவாசன் கூட வெள்ளையாகத்தான் இருப்பாரு அவரை ஏன் நம்பல ?இதெல்லாம் ஒரு வாதம்னு சொல்லிக்கிட்டு !

**@ItsJokker**

நேத்து கூட நினைச்சேன், நாளைக்கு ஆட்சி மாறிடும் பிஜேபி போயிடும் இனிமே இப்படி மீம் போடுற வேலைய விட்டுட்டு வாழ்க்கையில முன்னேறனும்னு.

குடுத்து வைக்கலையே அது கூட நடக்கல..!!!

**@chithradevi_91**

இணையத்தில் அதிகம் அசிங்கப்படுத்தப்பட்ட இருவரை மக்கள் மகிழ்ச்சியோட ஏத்துக்கிட்டுருக்காங்க

1. மோடி

2. ஸ்டாலின்

#நிஜம்

**@senthilcp**

டெல்லி போய் நம்மாளுங்க பழைய ஞாபகத்துல கோ பேக் மோடினு கூவிடப்போறாங்க,அடி வெளுத்துடப்போறாங்க 350+ vs 38

**@dhivyasridivi**

நாதக-அமமுக-மாம்பழம்-டார்ச்சுலைட்டு.

வட்டீ கருப்பட்டிய

வாசமுள்ள ரோசாவ !

**@HAJAMYDEENNKS**

காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என சொன்ன பிரக்யா சிங்கையே ஜெயிக்க வைத்து விட்டார்கள் வட நாட்டில் ..இது ஒன்னு போதாதா அவர்களின் கொள்கை ,அறிவை பறைசாற்ற !

**@ItsJokker**

VIP s ~ ஐபிஎல் பார்க்கணும், அடுத்து எலெக்சன வேற வாட்ச் பண்ணனும், இப்போ அடுத்து வேர்ல்ட் கப் வேற வருது அதுக்கும் சப்போர்ட் பண்ணி ஜெயிக்க வைக்கணும்.

பின்னாடியே பிக் பாஸ் வேற. ஷப்பா எவ்ளோ வேலை இருக்கு, எங்கள போயி வெட்டின்னு சொல்றீங்க?!

**@senthilcp**

ஒரு தமிழன் தான் தமிழனை ஆளனும்

அப்டியா?எங்கே ஒர்க் பண்றீங்க?

பெங்களூர்ல பெரிய ஐடி கம்பெனி

ஒரு தமிழன் தமிழ்நாட்ல தானே ஒர்க் பண்ணனும்?

**@Kozhiyaar**

அமீபாவும் நவயுக மனிதனும் ஒன்றே!!

இருவரும் “ஒரு செல்” உயிரினமே!!!

**@RahimGazzali**

கமல் வெள்ளையாக இருப்பதால் மக்கள் நம்பிவிட்டார்கள் – சீமான்

கருப்பா இருக்கும் நீங்க நல்லா கதை சொல்லுவீங்கன்னு 16 லட்சம் பேர் நம்பியதை போல…

**@Kozhiyaar**

அம்மாவும், அப்பாவும் இறந்த பிறகு ‘அம்மா வீடு’ என்பது அந்நியமாகி போகிறது பெண்களுக்கு!!!

**@shivaas_twitz**

நியாயமா பார்த்தா அந்த கல்வெட்டு வச்ச கோவில் நிர்வாகியை ரிலீஸ் பண்ணி, அவருக்கே ஒரு கோவில் கட்டணும் ஓபிஎஸ்..!

**@yugarajesh2**

கேப்டன் டிவியில், ‘அமமுக தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அதன் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதுன்னு’ நியூஸ் வாசிச்சுக்கிட்டு இருக்கானுங்க#

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை மொமண்ட்..!!

**@dharmaraaaj**

ஹலோ நான் தான் இராமதாஸ் பேசுறேன் … அதிமுக தலைமை அலுவலகம் தானே….. அந்த இராஜ்யசபா சீட்டு…

இல்லங்க இது அதிமுக கட்சி அலுவலகம்…

அதாங்க அதிமுக கட்சி அலுவலகம் தானே….

இல்லங்க இது அதிமுக அலுவலகம்ங்க…..

யாரோ ராங் நம்பர் .

**@ajmalnks**

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண திட்டத்தை வெளியிட்டுள்ளது வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஜூன் 13-ம் தேதியிலிருந்து 15-ம் தேதி வரை கிர்கிஸ்தானில் நடைபெறும் SCO மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்-மோடிஜி

**@shivaas_twitz**

அடுத்து, எடப்பாடியாரின் ராச தந்திரங்கள்னு கட்டுரை எழுதுவாங்களே

அதை நினைச்சா தான்..

**@parveenyunus**

சென்ற முறை இருந்ததைவிட மோடி அலை மிகவும் வேகமாக அடித்திருக்கிறது – ஹெச். ராஜா # தமிழ் நாட்டில் அதைவிட வேகமாக பெரியார் அலை அடித்திருக்கிறது.

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share