ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் தேவை 6.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு குறித்த விவரங்களை மத்திய பெட்ரோலியத் துறையின் ஓர் அங்கமான பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் தேவை 18.34 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. இது 2017ஆம் ஆண்டின் ஜனவரி மாத அளவை விட 6.4 சதவிகிதம் கூடுதலாகும். ஜனவரி மாதத்தில் 13.2 சதவிகித உயர்வுடன் மொத்தம் 2.37 மில்லியன் டன் அளவிலான பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரமான சமையல் எரிவாயுப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதால், சமையல் எரிவாயு பயன்பாடு 11 சதவிகிதம் உயர்ந்து 2.31 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. நாப்தா எரிபொருள் தேவை 1.2 சதவிகித உயர்வுடன் 1.26 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ள நிலையில், சாலை அமைப்பில் பயன்படுத்தப்படும் பிடுமன் எரிபொருளுக்கான தேவை 15.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.�,