uதிருவல்லிக்கேணியில் இளைஞர் வெட்டிக் கொலை!

Published On:

| By Balaji

திருவல்லிக்கேணியில் நள்ளிரவில் வீடு புகுந்து இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவரது மகன் அறிவழகன் (24). இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை என தெரிகிறது. மாறாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதால் ரவுடிகள் பெயர் பட்டியலில் இவரது பெயரும் உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அறிவழகனைச் சரமாரியாக வெட்டியுள்ளது. கை, கால், தலை என அனைத்து இடங்களிலும் பலத்த காயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை தாக்கியது மட்டுமின்றி தலையைப் பிளந்து அவரது மூளையை ஒரு தட்டில் எடுத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளது அந்த மர்ம கும்பல்.

சிறிது நேரத்தில் அறிவழகனின் உறவினர் அவரது வீட்டுக்கு வந்து பார்த்த போது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது, இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா சதுக்கம் போலீசார் அறிவழகன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது வரை கொலைக்கான காரணம் குறித்துத் தெரியவில்லை. கொலை செய்யப்பட்டவர் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி பல்பு குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்றும் அதனால் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel