tதடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படாது: ஆணையர்!

Published On:

| By Balaji

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமானது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம், கட்சி கூட்டங்களில் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றாமல் மக்கள் கலந்து கொள்வதால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது.

இந்நிலையில், இன்று(மார்ச் 18) சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் சராசரியாக 350 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமானது. தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதால் மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சென்னையில் 40 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமானது.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 30 ஆயிரம் பணியாளர்களில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு போடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை. ஊரடங்கு குறித்து வதந்தி பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பொதுக் கூட்டத்திலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share