y82,000 பழைய பஸ் டிக்கெட்: திருச்சியில் ஆச்சரியம்!

Published On:

| By Balaji

திருச்சியில் நடந்த கண்காட்சியொன்றில், 1945ஆம் ஆண்டு பேருந்து பயணச்சீட்டு உட்பட சுமார் 400 வெவ்வேறு பயணச்சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி நோட்டபிளி சொசைட்டி சார்பில் ஸ்டாம்புகள், விதவிதமான கைக்கடிகாரங்கள், ரூபாய் நோட்டுகள் போன்றவற்றுக்கான 3 நாள் கண்காட்சி திருச்சி ஸ்ரீனிவாசா அரங்கில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

திருச்சி புதூரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதன் என்பவர், இக்கண்காட்சியில் 400 வகையான பேருந்து பயணச்சீட்டுகளைக் காட்சிப்படுத்தியுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த ராமவிலாஸ் பஸ் சர்வீஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு இவற்றில் மிகப்பழமையானது. இந்த பயணச்சீட்டு 1945ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் இயங்கிய டிவிஎஸ் சதர்ன் ரோட்வேஸ் உட்படப் பிரபலமான பல பேருந்து நிறுவனங்கள் வழங்கிய பயணச்சீட்டுகள் இவரிடம் உள்ளன.

“என்னிடம் மொத்தமாக 82,000 பஸ் டிக்கெட்டுகள் உள்ளன. அவற்றில் 400ஐ மட்டுமே காட்சிப்படுத்திப்படுத்தியுள்ளேன். பிரிண்ட் செய்யப்பட்டவை, கையால் எழுதிக்கொடுக்கப்பட்டவை என்று பல வகை பயணச்சீட்டுகள் என்னிடம் உள்ளன. சேரன், பாண்டியன், பல்லவன், அண்ணா போக்குவரத்துக்கழகம் சார்ந்த அனைத்து பேருந்து பயணச்சீட்டுகளும் உள்ளன” என்று சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்த முடிவு!](https://minnambalam.com/k/2019/06/14/41)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share