Yவெற்றி கூட்டணியுடன் சுசீந்திரன்

Published On:

| By Balaji

ஆதலால் காதல் செய்வீர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் தன் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏஞ்சலினா’. இந்தப் படம் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்த படத்திற்கான பணிகளை மும்முரமாகச் செய்துவருகிறார் சுசீந்திரன்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடியை மையமாக வைத்து வெற்றி கண்ட சுசீந்திரன் தன் புதிய படத்தில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க ஆண் கால்பந்து வீரர்களைத் தேடிவந்த அவர் அதற்கான விளம்பரத்தை வெளியிட்டார். ஆனால் தற்போது நடக்கும் தயாரிப்பாளர்கள் சங்கப் பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகே ஆடிஷனைத் துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்தப் படத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் சசீந்திரனுடன் வேலை செய்த யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சூர்யா, படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோர் மீண்டும் இணைகிறார்கள். ஆதலால் காதல் செய்வீர் படத்தின் க்ளைமாக்ஸில் வரும் சிறுவன் நிக்னு, இதில் ஹீரோவின் சின்ன வயது கதாபாத்திரமாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel