வியட்நாம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மிளகு மீண்டும் இலங்கை வழியாக இந்தியாவுக்கு இறக்குமதியாகலாம் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்லாந்து தீவுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவிதமான மிளகுக்கும் தோற்றத்துக்கான சான்றிதழ் அளிக்க இலங்கை முடிவெடுத்துள்ளது. இலங்கையின் இந்த முடிவு இந்திய உற்பத்தியாளர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகளவில் மிளகு உற்பத்தி செய்யப்படும் பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இலங்கையின் இந்த நடவடிக்கை இந்திய உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
கேரளாவிலும், கர்நாடகாவிலும் ஏற்கெனவே வெள்ளத்தால் மிளகு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகம் வழியாக மிளகு கண்டெய்னர்கள் கையாளப்படுவதால் வியட்நாம் மிளகு அதிகளவில் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த மிளகு அதிகளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது என்றும் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து கேரளாவின் மிளகு மற்றும் மசாலா பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் கிஷோர் ஷாம்ஜி *பிசினஸ் லைன்* ஊடகத்திடம் பேசுகையில், “பிரேசிலின் கறுப்பு மிளகு இலங்கை வழியாக 70 விழுக்காடு வரி விதிப்புடன் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகிறது. தற்போது வியட்நாம் நாட்டின் மிளகு தூத்துக்குடி, சென்னை மற்றும் கிருஷ்ணபட்டணம் துறைமுகங்கள் வழியாக இந்தியச் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.�,