சந்திரயான் 2 விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோ தலைவர் சிவன் உட்பட விஞ்ஞானிகள் எவ்வளவ தூரம் உழைத்தார்கள் என்பது நாடு அறிந்ததே. ஆனால் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயானின் விகரம் லேண்டர், நிலாவை நெருங்கும் போது தொடர்பை இழந்தது . இதனால் நிலாவின் தென் துருவ பகுதியை ஆராய முடியாமல் போனது. எனினும், 98 சதவிகிதம் சந்திரயான் திட்டம் வெற்றி அடைந்ததாக இஸ்ரோ சிவன் தெரிவித்திருந்தார். அடுத்ததாக நிலாவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தீவிரம் காட்டி வருவதாகச் அவர் தெரிவித்தார்.
சந்திரயான் திட்டம் தோல்வி அடைந்தாலும், அதற்காக அயராது உழைத்த, தமிழகத்தைச் சேர்ந்த சிவன் நாட்டு மக்களின் அனைவரது இதயங்களையும் வென்றிருந்தார். அவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவன், இண்டிகோ விமானத்தில் எகானமி கிளாஸில் பயணித்துள்ளார்.
அவர் விமானத்திற்குள் ஏறியதும் அவரிடம் பேசி, கைகொடுத்து, அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர் பணிப்பெண்கள். அவர்களில் ஒருவர் மைக்கில் பயணிகளிடம் நம்முடன் இஸ்ரோ தலைவரும் பயணிக்கவுள்ளதாகப் பெருமிதமாக அறிவித்துள்ளார். பின்னர் தன் இருக்கைக்குச் சிவன் செல்லும் போது பயணிகள் அனைவரும் அவரை ஒரு ஹீரோ போல கைத்தட்டி வரவேற்றுள்ளனர். இதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
�,”