கோலிவுட்டுக்கே உரிய பெருமைகளில் ஒன்று வதந்திகள். நடிகர்-நடிகைகளுக்கு இடையேயான வதந்தி ஏதாவது ஒன்று எப்போதும் அனல் பறக்க கோடம்பாக்கத்தைச் சுற்றி வரும். தற்போது நடிகர் விக்ரமையும் இயக்குநர் கௌதம் மேனனையும் பற்றி ஒரு வதந்தி அதிகமாக பரவி வருகிறது.
விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். கௌதம் மேனனின் கனவு படமான `துருவ நட்சத்திரம்’ படம் மூலம் விக்ரம்-கௌதம் மேனன் முதன்முறையாக இணைந்துள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரிது வர்மா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை கௌதம் மேனன் தனது ஒன்ராகா என்டர்டெயிண்ட்மென்ட் மூலம் மோஷன் பிக்சர்ஸ் மதனுடன் இணைந்து தயாரித்து வருகின்றார்.
இந்நிலையில்,கௌதம் மேனன்-விக்ரம் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால் படக்குழு இதனை மறுத்துள்ளது. நடிகர் விக்ரம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
**“கௌதம் மேனனுக்கும், எனக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தற்போது வாலு இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறேன். வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு பின்னர் `துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வேன். வதந்திகள் குறித்து ரசிகர்கள் கவலைபடத் தேவையில்லை”** என்று குறிப்பட்டுள்ளார்.�,