காலையில நம்ம தம்பி ஒருத்தன் 30 நாள்களில் இந்தி கத்துக்கலாம் புக் வாங்கிட்டு போனான். என்னடா இப்படி இறங்கிட்டன்னு விசாரிச்சேன். அஞ்சு வருசமா தமிழ்நாட்டுக்காரங்களுக்கு டிவிட் போட்டது போதும். இப்ப இந்தி கத்துகிட்டு வடக்க போய் மீம் போட போறேன்னு சொல்றான். ஏற்கெனவே இன்ஜினியரிங் படிச்சுட்டு மீம் போடுகிட்டு இருக்க அங்க போனா சோத்துக்கு என்னடா பண்ணுவ, ஒண்ணு பக்கோடா போடனும், இல்லன்னா பானி பூரி தான் விக்கணும்னு சொன்னேன். பரவாயில்லைன்னு கிளம்பிட்டான். நம்மளைவிட பெரிய கோபக்காரனா இருப்பான் போலயே அப்டேட்டை பாருங்க, பஸ்ஸுக்கு காசு கொடுத்துட்டு வாரேன்.
**@nandhu_twitts**
வரப்போற மாப்பிள்ளை எப்படி இருக்கனும்??
வந்துட்டு போற மாதிரி இருக்கனும், இங்கயே தங்கிடப்பிடாது – பெண் வீட்டார்..!!
**@krishnaskyblue**
மத்தியப் பிரதேசத்தில் பெண் உள்பட 3 பேர் மீது கொடூர தாக்குதல், பசு பாதுகாவலர்கள் மீண்டும் அட்டூழியம்
//சங்கிஸ் ரைட் நவ்…
மத்தியில் எங்களுக்கு தனி பெரும்பான்மை கொடுத்த வாக்கு வங்கி கோமாதாவை” வெட்டுனா காண்டு ஆகுமா…ஆகாதா??
**@niranjan2428**
ஏன் மோடிக்கு ஓட்டு போட்டீங்கன்னு வடநாட்டுகாரர்களிடம் கேட்டால் பெரும்பாலானவர்கள் சொல்லும் ஒரே பதில், மோடி வராட்டி பாகிஸ்தான் இந்தியாவை பிடிச்சுரும்
அடேய்ய்ய்ய்…..
**@Kozhiyaar**
தேர்வில் நாம் தேர்ச்சி பெற்றாலும், நம் உயிர் நண்பன் தோல்வி அடைந்த மனநிலையை தான் தந்திருக்கிறது இந்த தேர்தல் முடிவுகள்!!!
**@Kozhiyaar**
உண்மையை தேடுவதில் ஒரு சிக்கல்!!
ஏனெனில் அது சட்டென்று நம் முகத்திலேயே அறைந்து விடும் வல்லமை வாய்ந்தது!!!
**@shivaas_twitz**
காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது – செய்தி
இப்ப தான் அந்த கமிட்டி பேர் நல்லா பொருந்துது
**@motheen_farook**
வெளிநடப்பு செய்யும் தி.மு.கவிற்கு மக்கள் வாக்களித்தது வருத்தமளிக்கிறது! – தமிழிசை
வெளிநாடு செல்லும் பிரதமர் க்கு பானிபூரி மக்கள் வாக்களித்தது வருத்தமளிக்கிறது! – தமிழக மக்கள்
**@manipmp**
ஓசோன்ல ஓட்டை இருப்பதை ஒவ்வொரு ஆண்டும் உணரவைக்கிறது “வெயில்”
**@mugamoodi11**
ஒரே நேரத்தில் ஒன்பது ரியாக்சன்களை கொடுப்பது பெண்களின் குணம்.!!
ஒன்பதில் ஒன்றுமே புரியாமல் தவிப்பது ஆண்களின் மனம்..!!
**@Yuvi_Twitz**
கடவுள் நீ என்ன செய்கிறாய் என்றுதான் பார்ப்பாரே தவிர அவர் உனக்கு எதுவும் செய்யமாட்டார்.
**@SubashiniBA**
தேர்தல் முடிவுகள் மூலம் தமிழகம் தனிமை படுத்தபட்டுள்ளது-கிருஷ்ணாசாமி
இதுக்கு முன்னால மட்டும் தமிழகம் இந்தியா கூடாவாயிருந்தது
**@mohanramko**
பல்வேறு பாடங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறது இந்த தேர்தல் – ராஜேந்திர பாலாஜி
டாடி கிட்ட சொல்லி, ட்யூஷனுக்கு போங்க
**@parveenyunus**
யாரையும் பழிவாங்கும் நோக்கமில்லை – மோடி # தமிழ்நாடு , கேரளா மக்களைத் தவிர..அப்படிதானே..?
**@motheen_farook**
ஒருவேளை தினகரன் சொன்ன ஸ்லீப்பர் செல் தமிழிசையா இருக்குமோ .? ஏன்னா தூத்துக்குடியி’ல வாண்டடா நின்னு தோக்குறாங்க ? கன்னியாகுமரியி’ல பொன்னரை சித்தப்பாவை வைச்சு தோக்கடிச்சுட்டாங்க .!? டவுட்டு ?
**@manipmp**
சுட்டி டிவி என்பது குழந்தை சாப்பிடுவதற்கான ஊக்கமருந்து
**@parveenyunus**
தமிழகத்தில் தினகரன் பல சிரமங்களுக்கு மத்தியில் தேர்தலை சந்தித்துள்ளார் – சுப்ரமணிய சுவாமி #
டோக்கன் கொடுக்க முடியாத சிரமமா..சாமி?
**@drkvm**
போரில் தோற்றாலும் களத்தை இழக்கவில்லை..
டாக்டர். ராமதாஸ்..
# சரி…சரி
கண்ண தொடச்சிகோங்க..!!
**@amuduarattai**
பிறந்து 14 மாதங்கள் தான் என்றாலும், இது பெரிய சாதனை. -கமல்ஹாசன்.
ஆனால் வயசுக்கு மீறி ரொம்ப பேசுதே.!
**@azam_twitz**
நம் அறிவை சோதிப்பதற்காகவே கேள்விகள் கேட்கும் இடத்தில் பதிலை விட மௌனமாக இருப்பது சிறந்தது!!!
**@parveenyunus**
லாங்-ட்ரைவின் போது பெட்ரோல் போட மறந்தாலும் ம்யூசிக் சிஸ்டத்தில் இளையராஜா பாடல்கள் அடங்கிய பென்-ட்ரைவ் மறக்காமல் போட்டு விடுகிறோம்.
**@Thaadikkaran**
தமிழகத்தில் ஏற்பட்ட தோல்வி தற்காலிகமானது. நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம் – தமிழிசை# அது அப்படி அல்ல, தாற்காலிகமானது..!
**@RahimGazzali**
கடந்த தேர்தலில் தோற்றபோது திமுகவினர் போட்டுக்கொண்டிருந்த சதவீத கணக்கையெல்லாம் இப்ப அதிமுகவினர் போட்டு பார்த்து ஆறுதலடைந்து கொண்டிருக்கிறார்கள்
**@parveenyunus**
நான் பெற்ற வெற்றியை ஜெயலலிதா பாதத்தில் வைக்கிறேன் – ஓபிஎஸ் மகன் # கார் டயர்ல வையுங்க..அதான் அதிமுக ஸ்டைல்.
-லாக் ஆஃப்
�,”