yவன்புணர்வு செய்து எரித்துக் கொலை: 14 பேர் கைது!

public

ஜார்க்கண்டில் 16 வயது சிறுமியை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் சத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று முன்தினம் (மே 3) தன்னுடைய உறவினர் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தனக்கு நடந்த கொடுமையைச் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை இந்தப் பிரச்சினையைப் பஞ்சாயத்துக்குக் கொண்டுசென்றார். சிறுமியை வன்புணர்வு செய்த நால்வரும் 50,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும், 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பினால் ஆத்திரமடைந்த நால்வரும் சிறுமியின் வீட்டுக்குச் சென்று பெற்றோரைத் தாக்கிவிட்டு, அவர்கள் கண் எதிரே சிறுமியைத் தீ வைத்து எரித்துள்ளனர். சிறுமி அங்கேயே இறந்துவிட்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், ஆறு பேரைக் காணவில்லை. இதற்காக, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பொதுமக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது. இந்தியாவில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே தொடர்ந்து நடக்கும் இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. இந்த சம்பவத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாகப் பஞ்சாயத்தில் தோப்புக்கரணம் போடச் சொல்லியிருப்பது மக்களின் கோபத்தை அதிகரிக்கச்செய்கிறது.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி 16 வயதாக இருந்தால், குற்றவாளிக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் 16 வயதிற்கு மேல் இருந்தால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பாலியல் பலாத்காரம் செய்தை உறுதி செய்வதற்கான சோதனைகள் மற்றும் ஆய்வுகள் போன்றவற்றை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்கிறது சட்டம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *