Yராமேஸ்வரத்தில் நீராடிய கீர்த்தி

public

ராமேஸ்வரத்தில், தனது குடும்பத்தாருடன் புனித நீராடினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். கமர்ஷியல் ஹீரோயினாக வளரும் அதே நேரத்தில் நடிகையர் திலகம் போன்ற படத்தில் நடித்து நடிப்பிலும் தன்னை நிரூபித்தவர்.

இந்த நிலையில், நேற்று தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றார் கீர்த்தி. அங்குள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடிய கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்னர் ராமநாதசுவாமி, பருவதவர்த்தினி அம்மன் சந்நிதிகளில் சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் பிரமாண்டத்தைக் கண்டு மகிழ்ந்தார்.

கீர்த்தி சுரேஷை சந்திக்க முயன்ற செய்தியாளர்களிடம், “கீர்த்தி சுரேஷின் தனிப்பட்ட பயணம் இது. அவரது வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றவும், தனது குடும்பத்தினர் நலனுக்கு வேண்டுதல் செய்யவும் வந்துள்ளார்” என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0