Yராட்சசனுடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்

Published On:

| By Balaji

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய ஜி.வி. பிரகாஷ், தமிழ் திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை அடைந்துள்ளார். இவ்வருடத்தின் தொடக்கத்திலிருந்து சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன் என ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் வசூல் ரீதியாக முதலில் வெளியான சர்வம் தாள மயம் நல்ல வரவேற்பையும், குப்பத்து ராஜா தோல்வியையும், வாட்ச்மேன் ஆகிய படங்கள் ஆவரேஜ் ஓபனிங்கையும் பெற்றது.

சமீபத்தில் சித்தார்த்துடன் இணைந்து சசி இயக்கத்தில் ஜி.வி. நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை ‘யூ’ சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராகி வருகிறது. எதிர்பார்ப்பிலிருக்கும் இப்படத்தின் பாடல்கள், டீசர் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், சசியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சதிஷ் சிவப்பு மஞ்சள் பச்சை படப்பிடிப்பின் போது ஜி.வியிடம் தனது திரைக்கதையை கூறியுள்ளாராம். திரைக்கதை பிடித்துப் போகவே ஜி.வியின் அடுத்த பட இயக்குநராக மாறியுள்ளார் சதிஷ்.

மரகத நாணய, ராட்சசன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஏக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி இப்புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share