Yரஹ்மான்-நயன்: சந்திப்பின் காரணம்!

Published On:

| By Balaji

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அமெரிக்காவில் சந்தித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா தற்போது தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார். கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள இன்டியோ பகுதியில் பிரபல கோச்செல்லா இசைத் திருவிழாவில் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

இதனையடுத்து விக்னேஷ்-நயன் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்து தேசிய விருது பெற்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “தேசிய விருது பெற்றிருக்கும் ஆஸ்கர் நாயகனுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டதுடன், அவரைச் சந்தித்த மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக, “கோயிலுக்குச் சென்று கடவுளைப் பார்த்த உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாம் படத்திற்காகச் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதும், காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான விருதும் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel