yமூக்குக் குத்திக்கொண்ட அமெரிக்க நீதிபதிகள்!

public

தமிழகத்துக்குச் சுற்றுலா வந்த அமெரிக்கப் பெண் நீதிபதிகள் தமிழகக் கலாச்சாரத்தை விரும்பி மூக்குக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மூக்குத்தி, மெட்டி, கொலுசு ஆகிய தமிழ் மரபுப் பழக்கங்கள் எல்லாம் வழக்கொழிந்துவருகின்றன.ஆனால் அமெரிக்க பெண் நீதிபதிகள் இருவர் தமிழ்ப் பண்பாட்டை விரும்பி மூக்குக் குத்திக்கொண்டு ஆச்சரியப்படவைத்துள்ளனர்.

தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டரஸ் வோர்மொல் (50), அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். யோகாவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். ஆண்டரஸ் தலைமையில் அமெரிக்காவைச் சேர்ந்த இரு பெண் நீதிபதிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, இந்தியாவில் உள்ளஏதாவதொரு சிவத்தலத்தில் வழிபட வருவதுண்டு.

இந்த ஆண்டும் இந்தியாவுக்கு வந்த இவர்கள் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி கும்பகோணம் சென்றுள்ளனர். அங்கு பெண்கள் மூக்குத்தி, தோடு, மெட்டி அணிதிருந்ததைக் கண்டு ரசித்த இரு பெண் நீதிபதிகள் தாங்களும் மூக்குக் குத்தி, நகை அணிந்துகொள்ள விரும்பியுள்ளனர். அப்போதுஅருகில் இருந்த நகைக்கடைக்குச் சென்று காது மற்றும் மூக்குக் குத்தியுள்ளனர்.

இது குறித்து நீதிபதி லாரா, “கடந்த 17 ஆண்டுகளாகச் சிவராத்திரியை முன்னிட்டு இந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலா வந்துசெல்கிறோம். இந்தஆண்டு கும்பகோணம் வந்தபோது தமிழ்ப் பெண்களின் நகை அணியும் கலாச்சாரம் மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாகக் காது, மூக்குக்குத்தியிருந்தது வித்தியாசமாக இருந்தது. எனவே நாங்களும் குத்திக்கொண்டோம்” என்று கூறினார். வரும் சிவராத்திரி தினத்தின்போது (பிப்ரவரி13) வாரணாசி செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *