yமுதல்வரிடம் வெளிப்படைத்தன்மை இல்லை: செம்மலை

Published On:

| By Balaji

‘முதல்வர் பழனிசாமியிடம் வெளிப்படைத்தன்மை இல்லை’ என ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த செம்மலைக் கூறியுள்ளார்.

சேலத்தில் வெள்ளிக்கிழமை (நேற்று) நடைபெற்ற அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. செம்மலைக் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: “முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட முறை சரியானதுதானா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “அவரிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. பழனிசாமி அணியினருக்குத் தங்களது பதவியைக் காத்துக்கொள்ள பன்னீர்செல்வம் என்ற முகமூடி தேவைப்படுகிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர் தனித்தே செயல்பட விரும்புகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்பின் கே.பி.முனுசாமி பேசியதாவது: “ஈ.பி.எஸ் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சூழ்நிலைக் கைதிகளாக உள்ளனர். அதிமுக-வில் உள்ள உண்மையான தொண்டர்கள் எப்போது பிரிந்தார்கள்… மீண்டும் இணைவதற்கு?” என்று அவர் தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel