yபுதிய கல்விக் கொள்கை: திமுகவை தொடர்ந்து பாமக!

Published On:

| By Balaji

புதிய கல்விக் கொள்கை அம்சங்களை ஆராய்வதற்கு பாமக சார்பில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜூலை 31ஆம் தேதி வரை புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றங்கள் குறித்து பொதுமக்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் தரும் பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 31ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (ஜூலை 16) சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகத்தில், அக்கட்சி கொடியை அன்புமணி ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியிடம், புதிய கல்விக் கொள்கைக்காக திமுக குழு அமைத்துள்ளது.இதில் பாமகவின் நிலை என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆராய்வதற்கு நாங்களும் ஒரு குழு அமைத்திருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக பாதக அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தி அதை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பித்து அழுத்தம் கொடுப்போம்” என்று பதிலளித்தார். நடிகர் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை கருத்து குறித்த கேள்விக்கு, “இது ஜனநாயக நாடு. மக்களை சார்ந்த கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்” என்று தெரிவித்தார்.

வேலூர் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும், அவர் கண்டிப்பாக வெற்றிபெறுவார் எனவும் குறிப்பிட்டார் அன்புமணி.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share