இன்னைக்கு எதிர்கட்சி எல்லாம் ஒண்ணா சேர்ந்து கொல்கத்தாவுல கூட்டம் போட்டது. பெங்கால் பழமொழி எதையாவது சொல்லி தேசிய அளவுல ஸ்டாலின் ட்ரெண்ட் ஆவாருன்னு பார்த்தா அந்த அட்டெம்ப்டே வேணாம்னு பேப்பரை பார்த்து வாசிச்சுட்டு வந்துட்டாரு. ஏதாவது கண்டண்ட் கிடைக்கும்னு பார்த்துகிட்டு இருந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் ஏமாந்து போயிட்டாங்க. ஆனால் நான் உங்களை ஏமாத்தமாட்டேன்னு எடப்பாடியே வந்து ஒவ்வொரு டெம்ப்ளேட்டுலயும் ஏறி உட்கார்ந்துட்டாராம்.
நேத்து எடப்பாடி பேசுன பேச்சு தான் இன்னும் ஓடிகிட்டு இருக்கு. கொட நாட்டு மேட்டரு என்னைக்கு ஒரு தூக்கா தூக்கப் போகுதுன்னு தெரியலை. அதுக்குள்ள பேசி வைப்போம்னு இறங்கிட்டாருன்னு தம்பி ஒருத்தன் கமெண்ட் அடிச்சான். நமக்கு எதுக்கு வம்பு நான் சிரிக்கலையே.. ஆனா அவர் பேச்சை கொஞ்சம் நேரம் டிவியில பார்த்தேன் சிரிப்பை அடக்க முடியலை. எம்ஜிஆரை நான் தான் கட்சியில சேர்த்தேன்னு மட்டும் தான் சொல்லல. மத்த படி தன்னோட அருமை பெருமைன்னு ஒரு லிஸ்ட் போட்டுட்டாரு. டேபிளுக்கு அடியில விழுந்த பர்பியை தேடி எடுத்தது எல்லாம் எப்படி சாதனையில் வரும்னு தான் யோசிச்சுகிட்டு இருக்கேன். நீங்க அப்டேட்டை பாருங்க.
**@Kozhiyaar**
குறட்டை போலத்தான் தவறுகளும்!!
செய்பவருக்கு அது தெரிவதேயில்லை!!!
**@Annaiinpillai**
உலகின் தலை சிறந்த பின்னணி இசை குழந்தைகளுக்கு தாலாட்டு பாடும் பொழுது பிறக்கிறது!
**@amuduarattai**
அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை ஜல்லிகட்டில் பிடிபடவில்லை.
“பிடிபட்டாலும்” தப்பிக்க வழி சொல்லிக் கொடுத்து இருப்பார்.!
**@கடவுள்**
நீங்கள் 100 கோடி 150 கோடினு சண்டை பிடித்து கொண்டே இருங்கள் மெட்டி ஒலி கோபியை சூப்பர்ஸ்டார் ஆக்க போகிறேன்..
**@manipmp**
கனவு பெரியதாக இருக்கும்போது “லோன்” அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்…
**@Suyanalavaathi**
இந்தியன் #1 ல சுதந்திரம் வாங்கும் போது தாத்தாக்கு ஒரு 29, 30 வயசு இருக்கும்..இப்போ ஒரு 100, 101 வயசு இருக்கும் போல !!
#Indian2
**@mohanramko**
‘கண் கலங்கிடிச்சி’
உப்புமா செய்யபோறேன்னு மனைவி வெங்காயம் அரிந்த போது….
**@mohanramko**
பாஜக எதையுமே செய்யவில்லை… உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் – அன்னா ஹசாரே
5 வருஷத்துக்கு ஒரு முறை செரிக்காம போயிடுது போல..
**@Ramesh46025635**
நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஒரே கட்சியில் இருந்து முதல்வரானேன் நான் – எடப்பாடி பழனிசாமி.
இருந்து என்பதை விட “குனிந்து” என்பதே பொருத்தமாக இருக்கும் சாமி.
**@sultan_Twitz**
“காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியில் மோதல் நிலவுகிறது!” – தம்பிதுரை #
எப்படி உங்களுக்கும் பாஜகவும் நிலவுதே அந்த மாதிரியா சாரே..?!
**@Suyanalavaathi**
எதற்கும் அஞ்சமாட்டேன்,கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவில் இருப்பேன் – எடப்பாடி பழனிசாமி
அடுத்த தேர்தலுக்கு அப்புறம் அதிமுக வே இருக்காதே.. அப்ப என்ன சார் செய்வீங்க !!
**@Akku_Twitz**
மத்திய அரசின் திட்டத்தால் அதிகம் பயன்பெற்றது தமிழகம்தான்” – பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய அரசால் அதிகம் பயன்பெற்றது, தமிழக மீம்ஸ் க்ரீயேட்டர்கள் மட்டும் தான்
**@Kozhiyaar**
சமையலறையில் இருந்து எழும் மணத்திற்கும், உணவின் சுவைக்கும் சம்பந்தம் உண்டு என்று நம்புபவன் பெரும் முட்டாள்!!!
**@Thaadikkaran**
ஒரு எருமை மாட்டின் கஷ்டம் இன்னொரு எருமை மாட்டிற்க்கே தெரியும்
ஏன்டா, உம்முன்னு இருக்கே.! வீட்ல திட்டுனாங்களா..!
**@laksh_kgm**
மெயின் சீரியலுக்கு அரைமணி நேரம் பாக்கி இருக்கையில், மனைவியை ஷாப்பிங் கூடிச் செல்பவன் புத்திசாலி !
**@Annaiinpillai**
நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஒரே கட்சியில் இருந்து முதல்வரானேன் – எடப்பாடி#
# மனுஷன் பெயில் ஆகி பெயில் ஆகி படிச்சிருபாப்புல போல !
**@Salahudeen**
7 முறை சிறைக்கு சென்றவன் நான் – எடப்பாடி
பாஜக கூட கூட்டணி இல்லைனு மட்டும் சொல்லி பாருங்க 8வது முறை அனுப்பிடுவானுங்க !
**@shivaas_twitz**
உலகின் மிக சுகமான தலையணை… அன்னைமடி…
எவன் சொன்னான்..? பஸ்ல பக்கத்து சீட்ல உட்காந்து இருக்கறவன் தோள்ல சாய்ஞ்சி தூங்கியிருக்கியா..?!
**@Vicky_stirring**
“மத்திய அரசின் திட்டத்தால் அதிகம் பயன்பெற்றது தமிழகம்தான்” – பொன்.ராதாகிருஷ்ணன் #
தமிழக மக்களா?தமிழக அரசா தெளிவா சொல்லுங்க தலைவரே…?!!
**@mohanramko**
நாம சம்பாதிக்கற காசையே சரியா கணக்கு பார்க்க முடியல.. படம் தியேட்டரில் போட ஆரம்பிச்சதுமே, லாப கணக்கை எப்படி சொல்றாங்களோ…?
சி. ஏ படிச்சி இருப்பாங்களோ.
**@HAJAMYDEENNKS**
கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிளேன் ஓட்டுது என்று சொல்வார்கள்
அது போல இருக்கிறது கொடநாடு விவகாரத்தில் என்னை தொடர்பு படுத்துவது – எடப்பாடி #
அது பழசுங்க..
இருக்குறவன் எனக்கென்னன்னு இருந்தால் எடப்பாடியும் முதல்வராவார் ..
இதுதான் புதுசு…!
**@bommaiya**
கசடதபற – வல்லினம்
ஙஞணநமன – மெல்லினம்
யரலவழள – இடையினம்
வாழாமாழ்ப்ள – டாஸ்மாக்கினம்
-லாக் ஆஃப்
�,”